கோதுமை மாவு பொட்டலத்தில் 15 ஆயிரம் ரூபாய் அமீர்கான் வைத்தது உண்மையா ?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கோதுமை மாவு பொட்டலத்திற்குள் தலா 15 ஆயிரம் ரூபாய் வைத்து ஏழைகளுக்கு வழங்கியதாக வெளியான தகவலை பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான் மறுத்துள்ளார்.

 

கடந்த வாரம் ஒரு ட்ரக் நிறைய ஒரு கிலோ கோதுமை மாவு பொட்டலங்களை டெல்லியில் உள்ள ஏழைகளுக்கு அமீர்கான் விநியோகித்தாகவும் அதை பிரித்து பார்த்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அதற்குள் பதினைந்தாயிரம் ரூபாய் காணப்பட்டதாகவும் டிக்டாக்வீடியோ உட்பட பல தகவல்கள் வெளியாகின.

 

இன்று டுவிட்டரில் அதை மறுத்துள்ள அவர் கோதுமை பொட்டலத்தில் வைத்து பணம் வழங்கும் நபர் தான் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். அந்த தகவல் ஒரு கட்டுக்கதை என்று குறிப்பிட்டுள்ள அவர் தான் ராபின்ஹூட் மாடலில் மர்மமாக உதவுபவன் அல்ல என்றும் கூறியுள்ளார். ஆமிர்கான் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply