சிவகங்கை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது – மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பேட்டி

Publish by: மகேஸ்வரன் --- Photo :


சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் 12 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் கொரோனா சிகிச்சை பெற்ற ஒரு நபரும் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 12 பேர் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே இங்கு சிகிச்சை பெற்ற 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கடைசியாக சிகிச்சை பெற்று வந்த இளைஞரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதே போல் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரும் பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்பினர்.

இருவரையும் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், டீன் ரத்தினவேல், மருத்துவர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர். இதையடுத்து, சிவகங்கை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், மாவட்டத்தில் தற்போது கொரானா பாதித்தவர்கள் யாரும் இல்லை, என்றாலும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தொடரும், பிறபகுதியிலிருந்து மாவட்டதிற்குள் வரும் நபர்கள் கண்காணிப்படுவார்கள் என தெரிவித்தார். பொதுமக்கள் உள்பட அனைவரும் அரசின் வழிகாட்டுதலை முறையாக கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது பேசிய டீன் ரத்தினவேல், பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ICMR, AIMS சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள படவில்லை என தெரிவித்தார். பின்னர் சிறப்பாக செயலாற்றிய டீன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதரா பணியாளர்களுக்கு இனிப்புகள் மற்றும் சால்வை அணிவித்து கொளரவித்தார்.


Leave a Reply