2024-ல் மனிதர்களை நிலவிற்கு அனுப்பும் நாசாவின் திட்டம்!

நாசா விற்காக நிலவில் தரையிறங்கும் லாண்டரை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் அமேசான் உரிமையாளர் , புளு ஆரிஜின் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. நிலவில் நீண்டகாலம் தங்கியிருக்கும் நோக்கில் 2024 ஆம் ஆண்டு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

 

இதற்காக ரோபோட்டிக் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவத்துடன் லேண்டர்களை வடிவமைத்து மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை நாசா அறிவித்திருந்தது. 72 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் அமேசான் உரிமையாளர் , புளு ஆரிஜின் மற்றும் டைனடிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. இந்த 3 நிறுவனங்களும் தனித்தனியாக லேண்டர்களை வடிவமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply