பிரசவித்த பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மதுரை சமயநல்லூரில் பிரசவித்த பெண் உட்பட இருவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. விளாங்குடி சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

 

பிரசவம் முடிந்த நிலையில் முன்னதாக அப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரொனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த கரிசல்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கொரொனா இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.


Leave a Reply