சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவி உயிரிழப்பு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த இறுதியாண்டு மருத்துவ மாணவி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். வேலூரை சேர்ந்த பிரதீபா கடந்த 16ஆம் தேதி வார்டில் பணிபுரிந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

 

14 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இன்று பணிக்கு செல்ல பிரதீபாவின் அறைக்குள் சென்று நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால் விடுதி காவலாளி உதவியோடு கதவு உடைக்கப்பட்டது. அறையில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை சக மாணவிகள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஏற்கனவே பிரதீபா உயிரிழந்தது தெரியவந்தது.

 

சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மருத்துவமனை முதல்வரிடம் விசாரணை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு பெற்றோருடன் பிரதிபா பேசியது தெரிய வந்துள்ளது. அவரது செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

 

இறந்த மாணவி கொரொனா வார்டில் பணிபுரியவில்லை என கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. எனினும் கொரொனா பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Leave a Reply