--- --:--:-- --

‘ஜிவ்’வென்று ஏறும் கொரோனா…! மத்திய அரசின் ஷாக் தகவல்

corona_virus_5696423_835x547-m

இந்தியாவில் கொரோனா பாதிப்பு, 35 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. அதன்படி, பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

 

கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன. இந் நிலையில் இன்று காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,610லிருந்து 35,043 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,075லிருந்து 1,147 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,373லிருந்து 8,889 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 10,498 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அவர்களில் 1,773 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 459 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் 6,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், குஜராத்தில் 4,395, டெல்லியில் 3,515, மத்திய பிரதேசத்தில் 2,660, ராஜஸ்தானில் 2,584, தமிழகத்தில் 2,323, உத்தரப்பிரதேசத்தில் 2,203, ஆந்திராவில் 1,403, தெலங்கானாவில் 1,038, கர்நாடகாவில் 565, கேரளாவில் 497, புதுச்சேரியில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

கடந்த 24 மணிநேரத்தில் 1,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்ட நிலையில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon