--- --:--:-- --

டெலிபோன் பூத்துக்குள் வாழும் முதிய தம்பதி!

9

கொரொனாவை தடுக்க பொதுமுடக்கம் அவசியமாக உள்ள சூழலில் இதன் பின் விளைவுகள் பல குடும்பங்களின் அடுப்பாங்கரை வரை எட்டியுள்ளன. அப்படி பாதிக்கப்பட்டுள்ள ஒரு மாற்றுத்திறனாளி இவர் தான் . பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு வழங்கிய ஆறுக்கு நான்கு அடி அளவுள்ள டெலிபோன் பூத் தான் கிரிதனனின் வாழ்விடம்.

 

25 ஆண்டுகளாக கோச்சடை முத்தையா கோவில் அருகே சாலையோரத்தில் டெலிபோன் பூத்தில் வாழ்ந்துவரும் இவர் செல்போன்கள் அதிகரிப்பால் டெலிபோன் பூத்துக்குள் வருவோர் எண்ணிக்கை குறைந்ததால் அன்றாட உணவுக்காக கற்பூரம், சாம்பிராணி, கடலை மிட்டாய் போன்றவற்றை பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விற்று வந்தார்.

 

பொதுமுடக்கத்தால் அந்த வேலையை செய்ய முடியாமல் அடுத்தடுத்த நாட்களில் துயரத்துடன் கழித்து வருகிறது அவரின் குடும்பம். இந்தப் பொது முடக்கம் மேலும் நீட்டிக்க பட்டால் தனது வாழ்க்கையை மேலும் புரட்டிப் போடப்பட்டு விடும் எனக் கூறும் இந்த முதிய மாற்றுத்திறனாளி மாவட்ட நிர்வாகமும் அரசும் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon