கொரோனாவில் இருந்து மீண்டு வரும் கோவை! நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 141 பேரில் இதுவரை 132 பேர் ” டிஸ்சார்ஜ் ” !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதித்ததோடு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலினால் 2323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த சில நாட்களாகவே நோய்த்தொற்று 50,60 என இருந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது.

 

சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா நோய்த்தொற்றுதலால் அதிகம் பாதிக்கப்பட்டது கோவை தான்.இதுவரை 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,பி.எஸ்.ஜி மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து கோவை மெல்ல,மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.மேலும்,கோவை மக்களுக்கு ஓர் நற்செய்தியாக கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் 141 பேரில் இதுவரை 132 பேர் பூரண குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ளனர்.தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 மட்டுமே.அதில் 6 பேர் பி.எஸ்.ஜி மருத்துவமனையிலும், மூவர் ஈ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இன்னும் ஓரிரு தினங்களில் இந்த 9 பேரும் கொரோனா சிகிச்சையில் இருந்து பூரண குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டால் கோவை கொரோனா இல்லா மாவட்டமாக மாறும்.

 

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,மாவட்ட ஆட்சியர் ராசாமணி,அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வே கோவையை கொரோனா தொற்று இல்லா மாவட்டமாக மாறி வருகிறது.

கோவையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 141 பேரில் இதுவரை 132 பேர் ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் கொரோனா இல்லா மாவட்டமாக கோவை மாறி வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.


Leave a Reply