தொழில் அதிபர் ஜோய் அரக்கல் துபாயில் தற்கொலை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கேரள மாநிலம் வயநாட்டில் சிறந்த தொழில் அதிபர் ஜோய் அரக்கல் துபாயில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணக்காளராக வாழ்க்கையை தொடங்கிய அவர் படிப்படியாக உயர்ந்து எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலில் கொடிகட்டி பறந்தார். வயநாடு அருகே உள்ள மண் அந்தம் பாடியில் நாற்பத்தி ஐந்தாயிரம் சதுர அடியில் அரண்மனையை கட்டினார்.

 

நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அதன் திறப்பு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வாரம் துபாயில் உள்ள பெரிய வணிக கட்டிடம் ஒன்றின் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

 

கச்சா எண்ணெய் தொழிலில் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலில் அவர் தனது சோக முடிவை தேடிக் கொண்டதாக கூறப்படுகிறது.அவரது உடல் நேற்று இரவு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது.


Leave a Reply