--- --:--:-- --

சென்னையை மொத்தமாக குத்தகை எடுத்த கொரோனா…! இதுவரை 906 பேர் பாதிப்பு

Nipah_virus_22_5_4_750_2

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 138 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனாவின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் அதன் தாக்கம் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக, சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 100 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

 

தற்போது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சமூக பரவலை அடைந்து விட்டதோடு என்ற நிலை உருவாகி உள்ளது. சென்னையில் நோய் தொற்று அதிகரிக்க மக்கள் தொகையும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

 

 

சென்னையில் மட்டும் ஒன்றேகால் கோடி பேர் வசிக்கின்றனர். பல்வேறு நாடுகளில் இப்படி கோடிக்கணக்கில் மக்கள் வசிக்கும் இடங்களில் கொரோனா அதிகமாக உள்ளது என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon