--- --:--:-- --

பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் சொன்ன பதில்

school-students

கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. பள்ளி இறுதி தேர்வுகள் நடத்த முடியாமல் போனதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே 3க்கு பின் தேர்வு நடத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்படலாம். இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

 

அவர் கூறியதாவது: ஊரடங்கு பிரச்சனை முடிந்த பிறகு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின், பள்ளிகளைத் திறப்பது குறித்து ஒரு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும்.

 

தமிழக அரசை பொறுத்தவரை பள்ளிகள் திறக்கப்பட்ட பின் வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், காலணிகள், சாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon