ஸ்விக்கி டெலிவெரி பாய்க்கு கொரோனா…! அவரிடம் உணவை வாங்கிய 100 வாடிக்கையாளர்கள் நிலை என்ன?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பரவலை கட்டுபடுத்த சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உணவகங்களில் பார்சல் மூலம் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக குறிப்பிட்ட நேரத்தில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் டோர் டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னையில் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் வளசரவாக்கத்தை சேர்ந்த ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்த ஊழியருக்கு ஏற்கனவே கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த தந்தையிடமிருந்து தொற்று பரவியுள்ளது. தற்போது பாதித்த ஊழியர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கடந்த 24 ஆம் தேதி வரை அவர் பணியில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்துள்ளார். ஆகையால் தடுப்பு நடவடிக்கைக்காக ஊழியர் எந்தெந்த வீடுகளில் உணவு டெலிவரி செய்தார் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவரை தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

மேலும் இவ்வாறு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்து சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் டோர் டெலிவரி பணியில் ஈடுபடும் நபர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Leave a Reply