பஞ்சாப்பில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பஞ்சாபில் மே மூன்றாம் தேதிக்கு பின்னர் மேலும் இரு வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் அமரேந்திர சிங் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நாள்தோறும் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை ஊரடங்கை தளர்த்தப்படுவதாகவும் அந்த நேரத்தில் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம் என தெரிவித்தார்.

 

இந்த புதிய விதிகளின் படி ஊரடங்கு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பஞ்சாபில் 372 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 71 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர், 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


Leave a Reply