தாயின் உடலை அடக்கம் செய்த உடன் பணிக்கு திரும்பிய தூய்மைப் பணியாளர்!
பெரம்பலூரில் தாயின் இறுதிச் சடங்கு முடிந்த சில மணி நேரத்திலேயே பணிக்கு வந்த தூய்மை பணியாளரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். வி களத்தூரில் 3 பேருக்கு கொரொனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் கொரொனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அய்யாதுரை என்ற அவரது தாயார் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 21ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்த சில மணி நேரத்திலேயே அய்யா துரை தனது பணிக்கு திரும்பியுள்ளார். இதையறிந்த முதலமைச்சர் மக்களை காக்க வேண்டும் என்கிற அவரது உயர்ந்த எண்ணத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் தலை வணங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






