காஷ்மோரா பட பாணியில் மாந்த்ரீகம், பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ஏமாற்றிய கும்பல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


யாருக்கும் தெரியாமல் தாங்கள் ஏற்கனவே மறைத்து வைத்த இடத்தில் இருந்து பில்லி சூனியம் எடுப்பதாக பண மோசடியில் ஈடுபட்டு இருந்த மோசடி கும்பல் ஒன்றை ராமநாதபுரம் கமுதி போலீசார் கைது செய்துள்ளனர். மாந்திரீக மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

 

காஷ்மோரா படத்தில் நடிகர் கார்த்தி போலி சாமியாராக நடித்து பில்லி சூனியம் எடுப்பது போன்ற காட்சிகள் இருக்கும். அதுபோன்றே உண்மை சம்பவம் ராமநாதபுரம் கமுதி அருகே நடந்துள்ளது. டுபாக்கூர் மாந்திரிக கும்பல் கூண்டோடு சிக்கியது எப்படி? ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான செல்வகுமார்.

தனது வீட்டிலேயே சிறிய கோவில் அமைத்து மாந்திரீக சித்து வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். செல்வகுமார் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இரவு நேரங்களில் குறிசொல்லும் செல்வகுமார் பில்லி சூனியம் எடுப்பதில் பிரபலமானவர் என அந்த பகுதியினர் கூறுகின்றனர். தன்னிடம் குறி கேட்க வந்த தோப்புபட்டி கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி மற்றும் அவரது நண்பர்களிடம் தங்கப் புதையல் இருக்கும் இடம் தனக்கு தெரியும் என்று சொல்லியுள்ளார்.

 

ஆனையூரில் உள்ள அந்த புதையலில் தங்கக்கட்டிகள், தங்கச் சிலைகள், வைர கற்கள் இருப்பதாக வாய்க்கு வந்ததை அடித்து விட்டுள்ளார் செல்வகுமார். மேலும் அந்த புதையலை எடுக்க நால்வரும் காணிக்கையாக தலா 50 லட்சம் என இரண்டு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். சாமியாடி சொல்வதெல்லாம் உண்மை என நம்பிய நால்வரும் காணிக்கையை சாமி குறைக்க கூடாது என பேரம் பேசியுள்ளனர்.

 

ஆனால் சாமியாடி காணிக்கையை குறைக்கவில்லை. இதில் கடுப்பான நால்வரும் சாமியாடிக்கு தெரியாமல் திட்டமொன்றை தீட்டியுள்ளனர். ரகசிய புதையல் நமக்கு தான் கிடைக்க வேண்டும் சாமியாடி அந்த புதையலை யாருக்கும் கொடுக்க கூடாது என்று முடிவு செய்துள்ளனர். செல்போன் ஒன்றிலிருந்து சாமியாடி புதையலை மறைத்து வைத்துள்ளார் என்று மாவட்ட எஸ்பி க்கு போன் செய்து இக்கும்பல் தகவல் சொல்லியுள்ளன.

 

தகவல் சொன்ன கையுடன் அந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் சாமியாடியை செல்வகுமார் ரகசியமாக கண்காணித்தனர். மேலும் போலீசாரே சாமியாரிடம் குறி கேட்பது போன்று சென்றுள்ளனர். வந்தவர்கள் போலீசார் என தெரியாமல் அவர்களுக்கும் குறி சொல்லிய சாமியார் அவர்களிடமும் புதையல் விவகாரத்தை சொல்ல சாமியாடியை கையும் களவுமாக பிடித்தனர்.

 

அவரை பிடித்து விசாரித்ததில் அது போன்ற ஒரு புதையலே இல்லை என்பதும் பணம் பறிக்கும் நோக்கில் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சாமியாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் புதிய திட்டம் போட்ட தோப்புக் நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி மற்றும் முத்து மகாதேவன் அருள் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

மேலும் மாந்திரீகத்திற்கு பயன்படுத்திய மண்டைஓடுகள் சிலைகள் மற்றும் போலி வைர கற்களை போலீசார் கைப்பற்றினர். 5 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Leave a Reply