தமிழகத்தில் கொரொனா பாதிப்பு குறைகிறதா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஊடகத் துறையை சேர்ந்த ஒருவர் உட்பட 15 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

பட்டமேற்படிப்பு மாணவர் விடுதியின் பணியாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அங்கு தங்கியிருந்த மாணவர்கள் 102 பேரில் 100 பேருக்கு பாதிப்பு இல்லை என்றும் இருவர் பரிசோதனை முடிவு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரொனா இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. மைசூரிலிருந்து ஒசூர் வந்த நபருக்கு கொரொனா இருப்பதாக முதலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்தது.

 

இதனை தொடர்ந்து ரத்த மாதிரி சென்னை கின் இன்ஸ்ட்டிட்யூட்க்கு அனுப்பப்பட்டு இரண்டாவது கட்ட சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரொனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்திருப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கொரொனா பாதிப்பில்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி தொடர்கிறது.

 

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நபருக்கு கொரொனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. ஆந்திராவில் இருந்து வந்த நபர் ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அடையாறு ஸ்ரீராம் நகர் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.


Leave a Reply