ஹாங்காங்கில் உயிரிழந்த கணவனை இந்தியா மீட்டு வர முடியாமல் அங்கேயே சிக்கி தவிக்கும் மனைவி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஹாங்காங்கில் மாரடைப்பால் உயிரிழந்த சீர்காழியை சேர்ந்த நபரின் உடலை இந்தியா கொண்டு வர உதவ வேண்டுமென அவரது மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வடபாதி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் மனைவியுடன் ஹாங்காங்கில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி ராஜா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அங்கு ராஜாவை தவிர வேறு யாரையும் தெரியாததால் அவர் இறந்து ஒரு மாதம் ஆகும் நிலையில் அவரது உடலை இந்தியா கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கணவரது உடலை இந்தியா கொண்டு செல்ல தனக்கு உதவ வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு அனிதா கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply