வீடுகளிலேயே தொழுகையுடன் தொடங்கிய ரமலான் நோன்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கன்னியாகுமரியில் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு இன்று துவங்கியது. இதையொட்டி இஸ்லாமிய பெருமக்கள் தங்கள் வீடுகளில் தொழுகையில் ஈடுபட்டனர். ரமலான் நோன்பை ஆண்டுதோறும் பிறை கண்டு இஸ்லாமியர்கள் தொடங்குவது வழக்கம். துவக்க நாளில் அதி காலையில் மசூதிக்கு சென்று தொழுகை துவங்க படுவது வழக்கம்.

 

கொரொனா பரவல் தடுப்பு மற்றும் பொது ஊடகத்தில் காரணமாக இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகையுடன் ரமலான் நோன்பை துவங்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று அதிகாலை தங்களது வீடுகளில் குடும்பத்தினரோடு தொழுகையில் ஈடுபட்டு நோன்பு வைத்து வீட்டின் அருகே அழகிய மண்டபம் பகுதியில் வீடுகளில் தனிமனித இடைவெளியுடன் தொழுகை நடத்தப்பட்டது.


Leave a Reply