கோவை இணையதள ஊடக உரிமையாளரின் கைதுக்கு கமல், ஸ்டாலின் கண்டனம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கோவையில் இருந்து செயல்படும் இணையதள ஊடகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறையை முடக்காதீர்கள் எனக் கூறியுள்ளார்.

கைது செய்தவரை விடுதலை செய்யும்படி அவர் வலியுறுத்தியுள்ளார். கோவையில் கைது செய்யப்பட்டுள்ள டிஜிட்டல் ஊடகத்தின் ஆசிரியர் ஆண்ட்ரூ சான் ராஜபாண்டியனை விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஊடகத்தின் மீது வன்மம் கொண்டு ஏற்கனவே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செயல்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் எஸ் பி வேலுமணி காவல்துறையின் அதிகாரத்தை பயன்படுத்தி அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுவதை திமுக சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பேரிடர் நேரத்தில் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கைவிட்டு சிம்பிளிசிட்டி பதிப்பாளரை விடுவித்து ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல டிஜிட்டல் ஊடகத்தின் ஆசிரியர் ஆண்ட்ரூஸ்சாம்ராஜ்ய பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும் என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply