சென்னையில் கொரோனா வடிவமைப்பில் ஆட்டோ!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆட்டோவில் கொரொனா வைரஸ் போன்ற உருவத்தை வடிவமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஓவியங்கள், துண்டுப்பிரசுரம் உள்ளிட்ட பல்வேறு வகையான கொரொனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் ஆலந்தூர் மண்டலத்தில் ஆட்டோவில் கொரொனா வைரஸ் போன்ற அபாயகரமான உருவத்தை வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

இதேபோல் அனைத்து மட்டத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சூரிய ஒளியில் கொரொனா வைரஸ் விரைவில் அழிந்துவிடும் என அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரொனா வைரஸை சூரிய ஒளி எந்த வகையில் கட்டுப்படுத்துகிறது என்பது குறித்து அமெரிக்காவின் தேசிய ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

 

அதன் மேற்பரப்பு மற்றும் காற்றில் இருக்கும் கொரொனா வைரஸை சூரிய ஒளி அழிப்பதாக அந்த மையத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 21 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 20 சதவீத ஈரப்பதத்தில் 18 மணி நேரமாக உள்ள கொரொனா வைரசின் ஆய்வு 80 சதவீத ஈரப்பதத்தை உயர்த்தும்போது 6 மணி நேரமாக குறைவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

அந்த நிலையில் சூரிய ஒளியை செலுத்தும்போது இரும்பு, கதவுப்பிடி உட்பட மேற்பரப்பில் இருக்கும் வைரஸ் வெறும் இரண்டு நிமிடங்களிலேயே அழிந்து விடுவதாக கூறியுள்ளார். மேலும் காற்றில் இருக்கும் கொரொனா வைரஸ் சூரிய ஒளி பட்டதும் ஒன்றரை நிமிடங்களில் அழிந்து விடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.


Leave a Reply