ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து மனித உடலில் செலுத்தி சோதனை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் தடுப்புக்காக பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து மனித உடலில் செலுத்தி சோதனை செய்யப்பட்டது. உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி வைரசான கொரொனாவுக்கு இதுவரை எந்த மருந்தும் கண்டறியப்படாத நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தடுப்பூசி ஒன்றை தயாரித்துள்ளனர்.

 

இந்த தடுப்பூசி எட்வர்ட் ஒனில் மற்றும் எலிசா பிரணாடோ ஆகிய இரண்டு தன்னார்வலர்களின் உடலில் செலுத்தப்பட்டது. மனித உடலுக்குள் சென்று கொரொனா வைரஸுக்கு எதிராக செயல்படுகிறதா, பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்கிறதா, மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

 

சோதனை வெற்றி பெற்றால் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரொனா வைரஸ் நம்முடன் அதிக நாட்கள் இருக்கப் போவதால் நாம் கடக்க வேண்டிய தொலைவு நீண்டதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர்டெட்ராஸ் எச்சரிக்கை நிலம்விடுத்துள்ளார்.

 

அவற்றில் சில நாடுகளில் குறைந்து வரும் நிலையில் மீண்டும் தொற்று கிளம்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆபிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கொரொனா தொற்று அதிகரிப்பது கவலை அடைய வைத்ததாக கூறினார். கொரொனா வைரஸ் நம்முடன் நீண்ட காலம் இருக்க போவதால் நாம் செல்ல வேண்டிய தொலைவு அதிகம் என்று டெட்ராஸ் கூறினார்.


Leave a Reply