கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் ” டிஸ்சார்ஜ் ‘. மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் பழங்களை வழங்கியும்,கை தட்டியும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார் !!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


!கோவையில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் இல்லாமல் இருந்து வருகிறது.இன்று வரை கோவையில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

அவர்களில் 88 பேர் முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று கொரோனா சிகிச்சை பெற்று வந்த 4 பெண்கள் உட்பட 5 பேர் இன்று முழுமையாக குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.குணமடைந்தவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் பழங்களை கொடுத்தும்,கைகளை தட்டியும் உற்சாகமாக அனுப்பி வைத்தார்.கோவை மாவட்டத்தில் இதுவரை 93 பேர் ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிகழ்வில் ஈ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துமனை முதல்வர் நிர்மலா,மருத்துவ கண்காணிப்புக்குழு அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட தூய்மை பணியாளர்கள்,அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களை கைதட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.


Leave a Reply