நகை, பணம் இல்லாததால் விதவிதமாக சமைத்து சாப்பிட்ட திருடர்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருவண்ணாமலை அடுத்த ஆண்டா பட்டு கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்த திருடர்கள் நகை, பணம் இல்லாததால் விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிட்டு மது அருந்தி விட்டு சென்றுள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் குமார் சென்னை ஆவடியில் ராணுவ வீரராக பணிபுரியும் நிலையில் அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

15 நாட்களாக பூட்டியிருந்த வீட்டை காலையில் வந்து திறந்து பார்த்தபோது பின்பக்க ஜன்னல் கம்பி உடைந்து கிடந்துள்ளது. பீரோவில் நகைகள் எதுவும் வைத்திருந்ததால் ஏமாந்த திருடர்கள் சமையலறைக்குள் புகுந்து எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் என வகை வகையாக சமைத்து சாப்பிட்டு விட்டு சென்றுள்ளனர். அருகில் மது பாட்டிலும் இருந்துள்ளது.

 

ஜன்னலின் குறுகிய இடைவெளி வழியே சிறுவன் ஒருவனை அனுப்பி முன்பக்க கதவை திறக்க வைத்து திருடர்கள் திறக்க வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுகு நீர் குளத்தை சேர்ந்த மாடசாமி, துரைச்சி,பொன்னம்மாள் ஆகியோர் கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக காலையில் வயலுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

 

அப்போது முக்கூடலில் இருந்து அகரக்கட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் 3 பேர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் வி கே புதூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.


Leave a Reply