டிக் டாக் வீடியோக்களுக்கு லைக் வராததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உத்தரபிரதேசத்தில் தான் நடித்த டிக் டாக் வீடியோக்களுக்கு லைக் வராததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். நொய்டாவில் சலர்பூர் கிராமத்தில் வசிக்கும் நூர் இக்பால் என்ற இளைஞர் தனது வீடியோக்களை டிக்டாக்கில் பகிர்வதில் விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக அவரது வீடியோக்களுக்கு போதுமான லைக்குகள் வரவில்லை என்பதால் வருத்தமடைந்தார்.

 

இதனை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கூறி மனம் வருந்தி உள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் அவரை சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில் மனமுடைந்து இருந்த இக்பால் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply