அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில குழு உறுப்பினர் பா.சண்முகராஜன் தமிழக அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கை

Publish by: மகேந்திரன் --- Photo :


கொரோனா தொற்று பரிசோதனையை அதிகப்படுத்து போதிய மருத்துவ உபகரணங்களை உடனே வாங்கவும்!
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50லட்சம் நிவாரணம் வழங்கு .

 

கொரோனா சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டு கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்படுத்திற்கு 1.கோடி நிவாரணம் வழங்கு.ஊரடங்கு உத்தரவால் அடிப்படை வருமானத்தை இழந்து வாடும் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.10,000வழங்கு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் நலன் கருதி மார்ச்,ஏப்ரல்,மே,மாதங்களுக்கான 500 யூனிட்க்கு குறைவாக உள்ள மின்கட்டணத்தை ரத்து செய்.

 

தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்,டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்க்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் மாத தவனையை வங்கிகள் வட்டி இல்லமால் மூன்று மாதம் தள்ளி வைக்க வேண்டும் ..வங்கிகள் இதை மீறி வருகின்றன இதை தடுக்க வேண்டும்.

 

குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பயனடையும் வகையில் நிவாரண உதவி வழங்க வழிவகை செய்ய வேண்டும்.மக்களையும்!! வியாபாரிகளையும்!! காவல்துறை நண்பர்கள் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும்.

 

துப்புரவு பணியாளர்களுக்கு மாத ஊதியம் 1முதல் 5 தேதிக்குள் கொடுக்க வேண்டும், அவர்ளை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநில குழு உறுப்பினர் பா.சண்முகராஜன் கோரிக்கை அடங்கிய மனுவை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply