--- --:--:-- --

சத்யசாய் சரணாகதி டிரஸ்ட் சார்பில் 3 டன் கோதுமை மாவு,150 கிலோ டீத்தூள் கோவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது !!!

1

கொரோனோ எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதோடு,பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவின் கோர தாண்டவம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதோடு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 105 ஆக எகிறியுள்ளது. சென்னையில் மட்டும் 50 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.

 

இதனால் சாலையோரங்களில்,வசிப்போர்,ஆதரவற்றோர் மற்றும் வெளிமாநிலத்தினர் உண்ண உணவின்றி தவித்து வந்தனர்.இவர்களின் நிலையை கருத்தில் கொண்ட தமிழக அரசு தொழிலதிபர்களும்,பொதுமக்களும் முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியினை வழங்க வேண்டுகோள் விடப்பட்டது.பள்ளி மாணவர்களும்,பொதுமக்களும்,தொழிலதிபர்களும் தாமாக முன்வந்து முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியினை அளித்து வருகின்றனர்.கோவையில் இதுவரை 11 கோடி ரூபாய் முதல்வரின் நிவாரண நிதிக்காக வந்துள்ளது.

மேலும்,தன்னார்வலர்கள் பலரும் தாமாக முன் வந்து சாலையோரங்களில் வசிப்போர்,ஆதரவற்றோர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் உணவுப்பொட்டலங்களையும்,அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

 

அதன் ஒருபகுதியாக கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த மருத்துவ தம்பதிகள் பத்ரிநாதன் – கண்ணம்மை தாங்கள் நடத்தி வரும் சத்யசாய் சரணாகதி டிரஸ்டின் சார்பாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியை சந்தித்தனர்.அப்பொழுது,3 டன் கோதுமை மாவு மூட்டைகள் மற்றும் 150 கிலோ டீத்தூள் பாக்கெட்டுகளையும் வழங்கினர்.

 

இதுகுறித்து மருத்துவ தம்பதிகள் கூறுகையில் தற்போது 3 டன் கோதுமை மாவு மற்றும் 150 கிலோ டீத்தூளை இரண்டாம் கட்டமாக வழங்கியுள்ளதாகவும்,இதற்கு முன்னர் 6 டன் கோதுமை மாவு வழங்கியுள்ளதாகவும்,தேவைகளை பொறுத்து இன்னும் கூடுதலாக பொருட்களை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon