--- --:--:-- --

கள்ளக்காதலுக்காக 6 வயது மகன் அடித்து கொடூர கொலை!

9.2

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக தான் பெற்ற ஆறு வயது மகனை தாயே அடித்துக் கொலை செய்துள்ளார். தாயும் அவரது கள்ளக்காதலனும் கைதானது எப்படி? கள்ளக்காதல் உறவுக்கு தான் பெற்ற மகனை இடையூறாக கருதியுள்ளார் இந்த தாய். 6 வயது சிறுவன் என்றும் பாராமல் கொடூரமாக அடித்து சித்தரவதை செய்து உள்ளார்.

 

இறுதியில் சிறுவன் உயிரிழந்துள்ளான். நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர்கள் அருண், திவ்யா தம்பதி. ஆறு வயதில் அபிஷேக் என்ற மகனும் 3 வயதில் ஒரு மகனும் தம்பதியின் குழந்தைகள் கடந்த சில நாட்களுக்கு முன் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். மகன் அபிஷேக் உடன் கோவையில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். அப்பகுதியில் உள்ள ஒரு மிச்சர் கம்பெனியில் திவ்யா வேலை பார்த்து வந்துள்ளார்.

அங்கு கார் ஓட்டுநரான ராஜதுரை என்பவருடன் திவ்யாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். மகனும் கூடவே இருப்பதால் அவர்களின் தனிமை பாதிக்கப்பட்டுள்ளது. தங்கள் கள்ளக்காதலுக்கு மகன் இடையூறாக இருப்பதாக நினைத்த திவ்யா அவனை அடிக்கடி அடித்துள்ளார்.

 

மேலும் சரியாக உணவு அளிக்காமல் பட்டினி போட்டு உள்ளார். திவ்யா ஒருகட்டத்தில் பிரம்பால் அடிப்பது கரண்டியால் சூடு வைப்பது என திவ்யாவின் சித்திரவதைகள் எல்லைமீறி உள்ளன. சிறுவன் வலியால் கதறித் துடித்து அழும்போது மருந்தகத்தில் வலி நிவாரணி மருந்து வாங்கி கொடுத்து மேலும் சித்திரவதைகள் செய்துள்ளார் திவ்யா.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறுவன் திடீரென உயிரிழந்துள்ளான். திவ்யாவும், ராஜதுரையும் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிறுவனின் உடலில் பல காயங்கள் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்து பரிசோதித்து பார்த்தபோது உயிரிழந்தது தெரியவந்தது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவனின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

 

மருத்துவர்கள் விசாரணையில் மாடியிலிருந்து விழுந்து இறந்து விட்டதாக திவ்யா கூறியுள்ளார். சிறுவனின் உடலில் 17 இடங்களில் காயங்கள் இருந்தன. அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சாய்பாபா காலனி போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தான் அடித்ததில் சிறுவன் உயிரிழந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து திவ்யாவையும் அவரது கள்ளக்காதலன் ராஜா துறையையும் போலீசார் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon