--- --:--:-- --

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை கவலைக்கிடம்?

8

வட கொரிய அதிபர்கிம் ஜாங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருதய நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கிம் ஜாங்கின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 15ஆம் தேதி வடகொரியாவின் தந்தையாக அறியப்படும் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் இல் சுங்கின் பிறந்த தின நிகழ்வு நடைபெற்றது. இதில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை.

 

இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் கிம் ஜாங் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வட கொரியாவில் இருந்து வெளியிடப்படவில்லை.

 

இந்தியாவில் மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நான்கு நகரங்களில் கொரொனா தொற்று அபாய அளவில் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் ஊரடங்கை மீறுவதால் வைரஸ் பரவும் வேகம் அதிகமாகி வருவதாக தெரிவித்துள்ளது.

 

கொரொனா தொற்றுக்கு எதிராக போராடி வரும் சுகாதார துறையினர் மீது தாக்குதல் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மும்பை, இந்தூர், பூனே , ஜெய்ப்பூர், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் நோய் பரவல் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்ட மாநிலங்கள் அதி தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon