வாகனத்திலேயே உறங்கிய ஓட்டுநரால் சேதமடைந்த பொருட்கள்!
உக்ரைனில் கிடங்கில் தூங்கிக் கொண்டே வாகனத்தை இயக்கிய ஓட்டுநரால் ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பணிச்சுமையால் பொருட்களை கொண்டு செல்லும் சிறிய வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் தனது இருக்கையில் இருந்தவாரே அயர்ந்து தூங்கி விடுகிறார்.
மெதுவாக இயங்கிய வாகனம் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களின் மீது மோதியது. பொருட்கள் அடுத்தடுத்து சரிந்து மொத்தமாக சீட்டுக்கட்டு போல விழுந்தன. கண்ணாடிப் பொருட்கள் பீங்கான் தட்டுகளில் மருந்து வகைகள் என ஏராளமான பொருட்கள் அதில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஓட்டுநரின் அஜாக்கிரதையால் ஏராளமான பொருட்கள் விழுந்து நாசமாகின.
கொரொனா வைரஸ் பரவ தொடங்கிய முதல் நாளில் இருந்தே உலக நாடுகளை தாங்கள் எச்சரித்து வருவதாகவும் இதில் தாங்கள் அமெரிக்காவிடம் எதுவும் மறைக்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் இந்த விவகாரம் குறித்து ஜெனிவாவில் பேட்டியளித்தார்.

தங்கள் தலைமை அலுவலகத்தில் பணிபுரிபவர்களில் அமெரிக்கர்களும் அடங்குவர் என்றும் அமெரிக்க அரசின் நோய் தடுப்பு மையத்தின் 15 அதிகாரிகள் ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தில் தங்களுடன் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவித்தார். அமெரிக்காவிற்கு தெரியாமல் தாங்கள் விவகாரத்தில் எதுவும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
கொரொனா விவகாரத்தை பயன்படுத்தி உலக தலைவர்கள் தங்கள் அரசியல் எதிரிகளை பழி தீர்ப்பதை நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்தார். உலக சுகாதார நிறுவனம் கொரொனா பரவல் குறித்து ஆரம்பத்திலேயே எச்சரிக்கவில்லை என உலக நாடுகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக குறை கூறியிருந்த டிரம்ப் அந்த அமைப்பிற்கு நிதி உதவியையும் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் விளக்கம் வெளியாகியுள்ளது.






