கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பிகு நடனம்!
அசாம் மாநிலத்தில் கொரொனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் அம் மாநிலத்தின் பாரம்பரிய பிஹு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நாகோன் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மன அழுத்தத்திற்கு இடையையும், கொரொனா அச்சத்திற்கு இடையேயும் இரவு வெகுநேரம் வரை பணியாற்றி வரும் காவல்துறையினர் பணிக்கு இடையே ஒரு மாற்றத்தை கருதி நடனமாடினர்.
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 27 நாட்களுக்கு பின்னர் சுங்கச்சாவடிகள் நேற்று இயங்க தொடங்கின. ஊழியர்கள் முக கவசம் அணிந்து கையுறை அணிந்து பணியில் ஈடுபட்டனர். கார், வேன், ஜீப் ஆகியவற்றிற்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டு 45 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சிறிய ரக வாகனங்கள், மினி பேருந்திற்கு 65 ரூபாயிலிருந்து 70 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பேருந்து, லாரிகளுக்கு 140 ரூபாயிலிருந்து 145 ரூபாயாகவும், கனரக வாகனங்களுக்கு 155 ரூபாயில் இருந்து 160 ரூபாயாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கன்டெய்னர் லாரிகளுக்கு 220 ரூபாயிலிருந்து 225 ரூபாயாகவும் பெரிய கண்டைனர் லாரிகளுக்கு 265 ரூபாயிலிருந்து 270 ரூபாயாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.






