திருப்பதி மலையில் வன விலங்குகளின் நடமாட்டம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ஊரடங்கு காரணமாக பக்தர்கள் வருகை தடை பட்டுள்ளதால் திருப்பதி மலையை சுற்றியுள்ள காடுகளில் வசிக்கும் வன விலங்குகளான சிறுத்தைகள், மான்கள், பாம்புகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்டவை திருப்பதி மலைப் பகுதியில் சர்வசாதாரணமாக உலா வரத் துவங்கிவிட்டன. திருப்பதி மலையில் உள்ள அவுட்டர் ரிங் ரோடில் சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

சிறுத்தை நடமாட்டத்தால் அருகிலுள்ள வாலாஜா நகர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்திய வன அதிகாரி சதானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட மானின் மீது குரங்கு ஏறி சவாரி செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மானின் முதுகில் குரங்கு ஏறிய பின்னர் அந்தமான் நடக்கத் தொடங்குகிறது. அப்போது குரங்கு மான் மீது வசதியாக அதன் முதுகில் அமர்ந்து கொள்கிறது. அந்த மான் புல் மேயும் போது கூட குரங்கு கீழே இறங்காமல் சவாரி செய்து கொண்டிருந்தது.


Leave a Reply