மல்லையாவை நாடு கடத்த லண்டன் உயர்நீதிமன்றம் அனுமதி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு எதிராக விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சுமார் 9000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் மோசடி மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் பிரிட்டன் அரசுக்கு அனுமதி வழங்கியிருந்தது.

 

இதை எதிர்த்து விஜய் மல்லையா லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த முறையீட்டை நீதிபதிகள் ஸ்டீபன், எலிசபெத் அமர்வு கடந்த பிப்ரவரியில் விசாரித்தது. இந்நிலையில் விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி வழங்கும் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

 

சர்வதேச விமான சேவையை ஜூலை மாதத்திற்கு முன் மத்திய அரசு அனுமதிக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. கொரொனா பரவலைத் தடுக்கவே மூன்றாம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மே மாதம் 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் அடுத்து வரும் 4ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களை இயக்கப் போவதாகவும் அதற்கான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது. ஆனால் விமான சேவை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கவில்லை.

 

எனவே முன்பதிவு செய்ய வேண்டாம் என விமான போக்குவரத்து அமைச்சகம் விமான நிறுவனங்களை அறிவுறுத்தியது. இந்த நிலையில் கொரொனா பரவலுக்கு விமான சேவை முக்கிய காரணியாக இருந்துள்ளதால் சர்வதேச விமான சேவையை ஜூலைக்கு முன்பாக தொடங்க வாய்ப்பு இல்லை என்றும் விமான நிறுவனங்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

 

உள்நாட்டு விமான போக்குவரத்து கொரொனா பரவலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Leave a Reply