அறிகுறி இல்லாமல் 80% பேருக்கு கொரோனா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாட்டில் 80 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரொனா பரவுகிறது என்பது கவலை அளிப்பதாக ஐ‌சி‌எம்‌ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

நாடு முழுவதும் கொரொனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ‌சி‌எம்‌ஆர் மூத்த விஞ்ஞானி டாக்டர் ராமன் அறிகுறி இல்லாமல் தொற்று பரவுவதால் அதை கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றார்.

 

தொற்று உறுதியான நபர்களின் தொடர்பில் இருந்த நபர்களுக்கு சோதனை நடத்தப்பட்ட உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறிகுறிகள் இல்லாமல் கொரொனா தொற்றுவதைத் தவிர்க்க சோதனை முறைகளில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply