கொரோனா உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு நேரிடும் அவலம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்துவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் தேவையற்ற அச்சத்தால் மருத்துவர்களை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுவே கொரொனாவுக்கு எதிரான யுத்தத்தில் உள்ளவர்களின் ஒவ்வொரு கேள்வியும்.

 

கொரொனாவால்பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததால் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது கடந்த சில நாட்களாக தொடர்கிறது. சென்னையில் கொரொனாவால் உயிரிழந்த மருத்துவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய சென்ற அவர்கள் மீது கற்களை வீசி சிலர் தாக்குதல் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுபோன்ற செயல்கள் மருத்துவர்களின் சேவையை அவமதிப்பாகும். உயிரிழந்தவரின் உடல் அரசின் விதி முறைப்படி அடக்கம் செய்யப்படுவதால் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

கொரொனாவால் உயிரிழந்தவரின் உடலையோ அல்லது கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் உடலை தகனம் செய்யும் இடத்திற்கு அருகே வசிப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள் மருத்துவர்கள். கொரொனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி.

 

கொரொனா பாதிக்க அதிக வாய்ப்புள்ளது என தெரிந்தும் அந்த துறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் தன்னலமற்ற சேவை பாதம் பணிந்து போற்றுதலுக்குரியது. அப்படிப்பட்டவர்கள் கொரொனாவால் உயிர் இழக்கும் போது அரசு மரியாதையோடு உடலை அடக்கம் செய்ய வேண்டாம் சக மனிதனுக்கு மரியாதை கொடுத்தால் போதும் என்று மருத்துவர்கள்.


Leave a Reply