தமிழக மீனவர்களுக்கு தடை… ஆனால் பன்னாட்டு கப்பல்கள் மீன் பிடிக்கலாமா..? இது எவ்வகை நீதி..? கமல் போட்ட டுவீட்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


மீன் பிடித்தடைக்காலம் என அறிவித்து தமிழக மீனவர்களுக்கு தடை விதித்து விட்டு, நமது கடல் எல்லையில் பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் மீன் பிடிப்பது எவ்வகை நியாயம்? என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தமிழகத்தில் ஆண்டுதோறும், 2 மாதங்களுக்கு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இந்தத் தடை விதிக்கப்படுகிறது.இந்த தடைக்காலம் கடந்த 15-ந் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்தத் தடைக்காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மீனவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கினாலும் அது போதுமானதல்ல; கூடுதலாக வேண்டும் என்பது அவர்களின் நீண்ட கால கோரிக்கை.

மேலும் தற்போது கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு போடப்பட்டதால், ஏற்கனவே ஒரு மாதமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீன்பிடி தடைக் காலமும் இபபோது தொடங்கி மீனவர்களின் படகுகள் ஓய்வெடுக்கத் தொடங்தியுள்ளன.

 

இந்நிலையில் இன்று காலை, சென்னைக்கு கிழக்கே தமிழக கடல் எல்லையில் வெளிநாட்டு கப்பல்கள் மீன் பிடிப்பதை மீனவர்கள் கண்டறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டு, மீனவர்கள் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மீனவர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், இது எவ்வகை நீதி? என கேள்வி எழுப்பி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

 

ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி? என
கமல் டுவீட் செய்து மத்திய, மாநில அரசுகளை சாடியுள்ளார்.


Leave a Reply