2025 இல் மீண்டும் போர் புரிய காத்திருக்கும் கொரொனா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


2025 ஆம் ஆண்டில் மீண்டும் கொரொனா தாக்க வாய்ப்புள்ளதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். உலக நாடுகளை அழித்து வரும் கொரொனா வைரஸ் குறித்து கணித கணக்கீடுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

 

தனிநபர் இடைவெளி விடுவதை உடனடியாக தளர்த்தினாள் புதிய கொரொனா நோயாளிகள் பெரும் அளவில் உருவாக வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

கொரொனா வைரஸ் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த புதிய சிகிச்சை முறைகள் எதுவும் இல்லாத நிலையில் 2022 ஆம் ஆண்டு வரை தனிநபர் இடைவெளியில் மக்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம் என்றும் தனிநபர் இடைவெளியை இலையுதிர் காலத்தின்போது தளர்த்தினால் அது குளிர் காலத்தில் ப்ளூ காய்ச்சல் சீசன் உடன் இணைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் 2025 ஆம் ஆண்டில் கொரொனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெற்று தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என கணித்துள்ளனர்.


Leave a Reply