வெண்டிலேட்டருக்கு மாற்றான சுவாச கருவி! புதிய கண்டுபிடிப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க சிரமப்படுவோரின் சுவாசத்தை சீராக்க வேண்டிலேட்டருக்கு மாற்றான சுவாசக் கருவியை ஜெர்மன் நாட்டு பிரபல சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸின் பார்முலா-1 பிரிவு தயாரித்துள்ளது. ஆக்சிஜன் காற்று நுரையீரலுக்குள் செலுத்தும் இந்த வகை கருவிகள் கொரொனாவால் பேரிழப்பை சந்தித்த சீன மற்றும் இத்தாலியில் உபயோகப்படுத்தப் பட்டுள்ள நிலையில், தற்போது லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

 

உத்திரபிரதேசத்தில் கொரொனா தொற்றில் ஈடுபட்டுவந்த மருத்துவ பணியாளர்கள் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஒரு பகுதியை சேர்ந்தவர் கொரொனா பாதிப்புக்கு உயிரிழந்தார். இதனால் அவருடன் நெருங்கிப் பழகிய அவரது குடும்பத்தினரை கொரொனா தனி வார்டுக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் மருத்துவ பணியாளர்கள் ஆம்புலன்ஸ் வந்தனர்.

அப்போது திடீரென அந்த பகுதி மக்கள் மருத்துவ பணியாளர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். வீடு, மாடிகளில் மற்றும் பால்கனியிலிருந்து கற்களை வீசினர். மருத்துவ பணியாளர்கள் காவல்துறையினர் படுகாயமடைந்தனர். போலீஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் சேதமடைந்தன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 7 பெண்கள் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.


Leave a Reply