--- --:--:-- --

கமல்ஹாசனை ஆதரிக்க மாட்டோம் – பசும்பொன் மக்கள் தேசம் அறிவிப்பு

4

இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘சண்டியர்’ என டைட்டில் வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. கடந்த 2004-ல் இதே தலைப்பில் கமல்ஹாசன் தனது இயக்கத்தில் ஒரு படத்தை இயக்கினார். அப்போது அந்த டைட்டில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தி பிடிப்பதாக இருப்பதாகவும், சாதி மோதலை உருவாக்கும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

 

 

 

அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவும் இந்த டைட்டிலை வைக்கக் கூடாது என்று தெரிவித்த நிலையில் அதற்கு ‘விருமாண்டி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இந்த டைட்டிலை கமல்ஹாசன் மீண்டும் வந்த நிலையில் 20 வருடங்களுக்கு முன்பு இந்த டைட்டிலை வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி தற்போதும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

 

 

இந்நிலையில், கமல்ஹாசனை ஆதரிக்க மாட்டோர் என்று பசும்பொன் மக்கள் தேசம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அக்கட்சி தலைவர் இசக்கி ராஜா கூறியதாவது, “முக்குலத்தோர் சமுதாயத்திற்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நமக்கு இது தேவையில்லாதது. கமல்ஹாசனை எந்த காலத்திலும் நாம் ஆதரிக்கக் கூடாது. பல மேடைகளில் ’தேவர் மகன்’ படத்திற்கு அப்படி பெயர் வைத்ததே தவறு என்று உணர்கிறேன் என்று சொன்னவர். பக்கா சுயநலவாதி. கமல்ஹாசனால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் நடந்தது இல்லை. அவருக்கு ஆதரவாக எந்த காலத்திலும் எப்போதும் நாம் பேசக் கூடாது.

 

 

தென் மாவட்டங்களில் இளைஞர்கள் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். இந்த இளைஞர்களை திசை திருப்பும் வேளையை கமல்ஹாசன் ஆரம்பித்துள்ளார். கமல் தற்போது ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். மக்கள் யாரும் மதிக்கவில்லை என்றதும் மீண்டும் இந்த மாதிரி படத்தின் தலைப்புகள் வைத்தால் தென் மாவட்ட மக்கள் சப்போர்ட் செய்வார்கள். முக்குலத்தோர் ஆதரவில் கமல்ஹாசனுக்கு இருக்கிறது என்று நினைக்கலாம். பிரயோஜனம் இல்லாத கமல்ஹாசனுக்கு ஆதரவாக யாரும் பேச வேண்டாம்.

 

 

 

கமல்ஹாசன் கலாச்சார சீரழிவு ஏற்படுத்த நினைத்தவர். நமக்கு தேவை ‘சண்டியர்’ என்ற பட்டம் கிடையாது. ஏற்கனவே நடந்த பிரச்சனையை சரி செய்வதே கடினமாக உள்ளது. இப்பொழுது தான் ஒவ்வொரு குடும்பமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் சண்டியராக ஆசைப்படுகிறீர்களா? இதற்கு முன்பு சொல்ல ஆள் இல்லாமல் பல குடும்பங்கள் அழிந்துள்ளது. நமக்கு ‘சண்டியர்’ பட்டமும் வேண்டாம். அதை கமல்ஹாசன் நமக்கு தரவும் வேண்டாம். தென் மாவட்டங்களில் பேச்சு வழக்குகளில் சேட்டை செய்வர்களை சண்டியர்கள் என்பார்கள்.

 

 

உடனே குறிப்பிட்ட ஒரு ஜாதியினர் தான் ’சண்டியர்’ என்று கமல்ஹாசன் கொண்டு வருகிறார். ‘சண்டியர்’ படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டாம். நமக்கான கோரிக்கை என்பது எது என்பதை பாருங்கள். நம் வருங்கால தலைமுறைகளை பாருங்கள். நம் சமூகத்தை வழி நடத்தும் நோக்கில் பாருங்கள். கமல்ஹாசன் படத்திற்கு முக்குலத்தோர் யாரும் ஆதரவு கொடுக்கக் கூடாது” என்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon