தென்மேற்கு பருவமழை ஜூன் 1 இல் தொடங்கும்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இந்திய தென்மண்டலத்தில் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் நீராதாரத்தை பூர்த்திசெய்யும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் ஜூன் 4ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை முடிவு என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் மழை இயல்பான அளவில் இருக்கும் என்றும் சராசரியாக 28 சென்டிமீட்டர் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply