ஏசி மூலம் வேகமாக பரவும் கொரோனா…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாம் தினமும் பயன்படுத்தும் ஏர்கண்டிஷனர் மூலமாக கொரொனா வைரஸ் பரவுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொரொனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அது எவ்வாறெல்லாம் பரவி கிறது என்ற ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன .இந்நிலையில் ஏசி மூலம் கொரொனா தொற்று விரைவில் பரவுவதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

 

சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு மூன்று வெவ்வேறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். அந்த உணவகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உணவருந்திக் கொண்டிருந்தார்.

 

அவர் இருமும்போதும் தும்மும்போதும் வெளிவந்த நீர்த்துளிகள் ஏசியில் கலந்து மூன்று குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று ஏற்படுத்தி இருப்பதாக சீனாவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மாகாணத்தில் இருக்கும் ஐந்து மாடி உணவகம் சீல் இடப்பட்டது.


Leave a Reply