பெண் காவலர்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்.பி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


புதுச்சேரியில் கொரொனா பாதுகாப்பு பணியின்போது பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக எஸ் பி சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநில காவல் துறையில் எஸ்பியாக பணியாற்றி வரும் சுபாஷிற்கு திருபுவனை பகுதியில் கொரொனா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இவர் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார்கள் வந்தன.

 

இதையடுத்து திருபுவனை காவல்துறையினர் அங்கு சென்று விசாரித்தபோது சுபாஷ் மீதான குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்று தெரிய வந்தது. காவல்துறை தலைமையகம் உத்தரவின் பேரில் சுபாஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

டெல்லியில் உணவு வினியோகம் சேவை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞருக்கு கொரொனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லி பகுதியில் இந்த இளைஞர் உணவு விநியோகித்த 22 வீடுகளை சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இளைஞர் உடன் பணிபுரிந்த 17 இளைஞர்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

மேலும் இந்த இளைஞர் சில மருத்துவமனைகளுக்கு சென்று வந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அது குறித்த விபரங்களை காவல்துறையினர் சேகரிக்க தொடங்கியுள்ளனர். கொரொனா அறிகுறிகளுடன் 20 நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த இந்த இடங்களுக்கு கடந்த 14ஆம் தேதி வைரஸ் தாக்குதல் உறுதிசெய்யப்பட்டது.

 

ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த மதுரை மாட்டுத்தாவணி சந்தை தற்காலிக இடத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. கொரொனா முன்னெச்சரிக்கையாக மாட்டுத்தாவணி சந்தை கடந்த 22 நாட்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் மலர் வியாபாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மலர் சந்தை இன்று முதல் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது.

 

அதன்படி விளையாட்டு மைதானம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகிய இரு இடங்களில் மலர் சந்தை தற்காலிகமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை மட்டுமே சந்தை திறந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply