அதிமுக எம்எல்ஏ வின் ஆதரவாளர்கள் 2 பேர் வெட்டிக் கொலை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அதிமுக எம்எல்ஏ வின் ஆதரவாளர்கள் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம் சி சம்பத் ஆதரவாளர்களுக்கும், பண்ருட்டி அதிமுக எம்‌எல்‌ஏ ஆன சத்திய பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்கனவே தேர்தல் முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.

 

இதனால் இரண்டு தரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படும் நிலையில் கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இருதரப்பினரும் தனித்தனியாக ஈடுபட்டு வந்துள்ளனர். ஊட்டி அருகே திருவல்லி பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு பணிகள் தொடங்கி நிவாரண உதவி வழங்குவது வரை அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் நேற்று இரவு எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மணிகண்டன் மற்றும் பாலாஜி ஆகியோர் வயிறு வலிக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த 10 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை கும்பலை தேடி வருகின்றனர்.


Leave a Reply