--- --:--:-- --

கொரோனா பாதித்தவர் எச்சில் துப்பினால் கொலை வழக்கு பதியப்படும்!

3

கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி துப்பினால் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என ஹிமாச்சலப் பிரதேச காவல்துறை டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில் கொரொனா பாதித்த பெண்ணை தனிமைப் படுத்துவதற்காக சுகாதாரத்துறை பணியாளர்கள் அழைத்துச் சென்றபோது அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் கொரொனா பாதிப்புள்ளவர்கள் யாரேனும் மற்றவர்களை நோக்கி துப்பினால் கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இதைப்போல் எச்சிலை துப்பினால் மற்றவருக்கு கொரொனா வந்தால் கொலை வழக்காக பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon