காவல்துறை உதவி ஆய்வாளரின் டூவீலரில் புகுந்த பாம்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


புதுக்கோட்டையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்தது. புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சந்திரசேகர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. தீயணைப்புத் துறையினர் முயற்சித்தும் பாம்பை வெளியே எடுக்கமுடியவில்லை. இதையடுத்து மெக்கானிக் ஒருவரை அழைத்து வந்த வாகனத்தின் சில பாகங்கள் கழட்டப்பட்டன. அப்போது வெளிப்பட்ட பாம்பை பிடித்த காவல் துறையினர் அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.


Leave a Reply