காரில் இருந்தபடியே 10 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவில் முதன்முறையாக காரில் இருந்தபடியே கொரொனா பரிசோதனை செய்யும் முறை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வருவோரின் ரத்தமாதிரி அவர்களின் காரில் அமர்ந்தபடியே எடுக்கப்பட்டு பின் 24 மணிநேரம் முதல் 36 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகள் அவர்களின் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

 

இந்த பரிசோதனையை மேற்கொள்ள நான்காயிரத்து 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் கொரொனா பரவுவதை கட்டுப்படுத்த இரு சக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு மருத்துவமனை தரப்பில் அனுமதி மறுக்கப்படுகிறது.


Leave a Reply