விளக்கேற்றிய நேரத்தில் துப்பாக்கியால் சுட்ட பாஜக மகளிரணித் தலைவி
நாட்டு மக்கள் அனைவரும் விளக்கேற்றும் நேரத்தில் பாஜக மகளிரணி தலைவி ஒருவர் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டுள்ளார். கொரொனாவுக்கு எதிரான போரில் மக்களின் ஒற்றுமையைக் காட்ட ஞாயிறு இரவு 9 மணிக்கு வீடுகளில் விளக்கு ஏற்றும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இதை தவறாக புரிந்து கொண்ட உத்திரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்ட மகளிரணி தலைவி மஞ்சு திவாரி வானை நோக்கி சுட்டு அந்த காட்சியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதேபோல் தெலுங்கானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் பெரிய தீப்பந்தத்தை ஏற்றிக் கொண்டு ஒரு கூட்டத்தோடு நின்று படம்பிடித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.






