--- --:--:-- --

கடற்கரையோரம் திமிங்கலங்கள் நீந்தி விளையாடிய வைரல் வீடியோ!

10

மும்பை கடலோரம் திமிங்கலங்கள் நீந்தி விளையாடுவதாக வெளியான வீடியோ உண்மையில் இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. ஊரடங்கு உத்தரவை ஒட்டி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளதால் நகருக்குள் வன விலங்குகள் நடமாடுவது, கரையோரம் கடல் வாழ் உயிரினங்கள் முகாமிட்டது போன்ற வீடியோக்கள் சமீபத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் மும்பை அருகே கடலில் அமைந்துள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் வயலை சுற்றி திமிங்கலங்கள் நீந்துவது ஒரு வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோ உண்மையில் இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டது என்றும் பிபிசி செய்தி நிறுவனத்தால் முதன்முறையாக பகிரப்பட்டது என்றும் வனத்துறை அதிகாரி வருவேன் விளக்கமளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon