தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 50 பேருக்கு பாதிப்பு..! மேலும் ஒருவர் உயிரிழப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 621 ஆகவும், சென்னையில் 57 வயது பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 6 ஆகவும் உயர்ந்துள்ளதாக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று வரை வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 571 ஆகவும், உயிரிழப்பு 5 ஆகவும் இருந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது:
தமிழகத்தில் இன்று மேலும் 50பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 

இவர்களில் 48பேர் ஏரே இடத்திற்கு சென்று வந்தவர்கள் ஆவர். இதன் மூலம் இது வரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உயர்ந்து உள்ளது. மேலும், வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 91, 851 ஆக உள்ளது என்றும் தெரிவித்துார்.

 

சுவாசப் பிரச்னை காரணமாக, ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு சேர்க்கப்பட்ட 57 பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். அவருடைய ரத்த மாதிரி சோதிக்கப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

 

இன்று உயிரிழந்த இந்தப் பெண் சில வாரங்களுக்கு முன் திருச்சிக்கு ரயிலில் சென்று வந்தது தெரிய வந்துள்ளது. இதனால் வேறு யாருக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்கிறதா? என்று ஆராய்ந்து வருவதாகவும் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.


Leave a Reply