தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சடையம்பட்டி, மேட்டுப்பட்டி, இருக்கன்குடி, தாயில்பட்டி உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து சூழலைக் குளுமை ஆக்கியது.

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது .தேனி மாவட்டம் போடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

 

போடி, கம்பம் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் அந்த பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Leave a Reply