இத்தாலியில் கொரோனா இறப்பு விகிதம் குறைகிறதா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய நம்பிக்கையின் ஒளி ரேகை தென்படுகிறது. பல்வேறு நாடுகள் கொரொனாவால் சின்னாபின்னமாக்கி நிலைகுலைந்து இருக்கும் நிலையில் ஸ்பெயினிலும் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக இறப்பு விகிதம் குறைய தொடங்கியது.

 

கடந்த 24 மணி நேரத்தில்இத்தாலியில் 525 பேர் உயிரிழந்ததாக இத்தாலியின் சிவில் பாதுகாப்பு ஏஜென்சியின் தலைவர் அறிவித்தார். இதுவரை நாட்டில் கிட்டத்தட்ட 16 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டதாக கணக்கிடப்படுகிறது.

 

ஆனால் மார்ச் 19 தொடங்கிய காலகட்டத்தில் இதுவே முதல்முறையாக எண்ணிக்கை குறைந்த நிலை என்று இத்தாலி அறிவித்துள்ளது. ஒரு மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பலன் அளித்து இருப்பதாக கருதப்படுகிறது.


Leave a Reply